திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் 15.வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தன்னார்வலர்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ள 200 படுக்கை கொண்ட கோவிட் கேர் சென்டரை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருவதால் 6 டன் ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட்டு வருவதாகவும், சில உதிரி பாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த பணிகள் தாமதம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், குமரன் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள 252 ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தேவையான ஆக்சிசன் கொள்கலன் அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த மையத்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.