பொள்ளாச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பயணிகளை எதிர்பார்த்து வாழ்வாதாரத்திற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள்; முழு ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பயணிகளை எதிர்பார்த்து வாழ்வாதாரத்திற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர்கள்; முழு ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில், தொடர்ந்து பரவல் அதிகரித்துவரும் காரணத்தினால் மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி திங்கட்கிழமை முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



பொள்ளாச்சியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு உள்ளன. கடைகள் திறக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் வருவார்கள் என நம்பி தங்களின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்து ஆட்டோ ஓட்டுநர்களும் சவாரிக்காகக் காத்திருந்தனர். ஆனால், பயணிகள் இல்லாததால் ஆட்டோக்கள் ஓடாமல் வரிசையாக புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஸ்டேண்டில் நின்றன. இதனையடுத்து இந்த முழு ஊரடங்கினால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கவேண்டுமென பொள்ளாச்சி ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...