பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் உள்ள பழங்குடியினருக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரகத்தில் சின்னார் பதி, நவமலை, சர்க்கார்பதி, நாகர் ஊற்று உள்ளிட்ட ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. கொரோனா நோய்த் தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆனைமலை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் தலைமையில் இன்று ஆழியார் அருகே உள்ள சின்னார் பதி மற்றும் நவமலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் பழங்குடியின மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து ஊரடங்கு காலங்களில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திமுக வினர் தெரிவித்துள்ளார்.