திருப்பூர்: திருப்பூரில் இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் வாகனங்களை போலீஸார் இன்று பறிமுதல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனோ பெருந்தொற்று அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களை கண்காணிக்கும் வகையில், ஆங்காங்கே காவல்துறை சார்பில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தெற்கு காவல் துறை சார்பாக கண்காணிப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்காணிப்பின் போது இ-பதிவு முறையில் பதிவு செய்யாமல் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே சுற்றித் திரிபவர்களின் இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மறுநாள் காவல் நிலையத்திற்கு வந்து அபராதம் கட்டி வாகனத்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து இதுபோல் வெளியே சுற்றித் திரிந்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.