வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கிய எம்எல்ஏ அமுல் கந்தசாமி..!

கோவை: வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அமுல் கந்தசாமி எம்எல்ஏ., தனது சொந்த செலவில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.


கோவை: வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அமுல் கந்தசாமி எம்எல்ஏ., தனது சொந்த செலவில் வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை தனித்தொகுதியில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமுல் கந்தசாமி. இவர் கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய நவீன ஆம்புலன்ஸ் வாகனத்தை தனது சொந்த செலவில் வாங்கித் தருவதாக உறுதி அளித்து இருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் அமுல் கந்தசாமி வெற்றி பெற்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், அவர் அளித்த வாக்குறுதியின்படி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் உட்பட நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் இந்த ஆம்புலன்ஸ் வாகனம் வால்பாறை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட உள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றும் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமிக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...