கோவை: வால்பாறையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரும் பொதுமக்களை தடுக்க சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதை சுற்றியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிகளில் கொரானா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் மற்றும் சளி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வால்பாறை நகரில் மக்கள் கூட்டம் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று விரைவில் பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், வால்பாறையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க ஸ்டான் மோர் சாலை, நல்ல காத்து பாலம், நடுமலை பாலம், புது தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகளை வருவாய்த்துறையினர் அமைத்துள்ளனர்.

இந்த சோதனைச்சாவடிகளில் காவல்துறையினர் நகருக்கு வருபவர்கள் அனைவரையும் விசாரணை செய்து தேவையின்றி சுற்றுபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்கு வருபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.