கோவை சில்மிஷ வாலிபர்... சீறிப் பாய்ந்தது குண்டர் சட்டம்..!

கோவை: கோவை தொண்டாமுத்தூரில் இளம் பெண்ணிடம் அடிக்கடி தகாத முறையில் சில்மிஷம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது புகார் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூரில் இளம் பெண்ணிடம் அடிக்கடி தகாத முறையில் சில்மிஷம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்த வாலிபர் மீது புகார் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் மல்லிகா நகரைச் சேர்ந்த 25 வயது இளம் பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் 26, என்பவர் அடிக்கடி தகாத முறையில் ஈடுபட்டு தகராறு செய்து வந்தார். நேற்று மீண்டும் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிரபாகரன் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பெண்களிடம் இவ்வாறு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. மேலும், அவர் மீது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொண்டாமுத்தூர் போலீஸார் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு, பிரபாகரன் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் பிரபாகரனைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச...

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...