வால்பாறையில் ஐந்து வயது சிறுமி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2,300/- வழங்கினார்..!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 வயது சிறுமி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தான் உண்டியலில் சேர்த்து வைத்த 2,300 ரூபாயை வால்பாறை வட்டாட்சியாளரிடம் வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 5 வயது சிறுமி, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு, தான் உண்டியலில் சேர்த்து வைத்த 2,300 ரூபாயை வால்பாறை வட்டாட்சியாளரிடம் வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகத்தீவிரமாக அடைந்த நிலையில், தமிழக அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள், அமைப்பினர், தனிநபர் போன்றவர்கள் கொரோனா நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.



இந்தநிலையில், வால்பாறை கக்கன் காலனி பகுதியில் குடியிருக்கும் வழக்கறிஞரான அன்பு நாகராஜின் மகள் இசை யாழினி(வயது 5) தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயில்கிறார். இச்சிறுமி, தனது பிறந்தநாள் விழாவிற்கு கேக் மற்றும் புத்தாடைகள் வாங்க உண்டியலில் சேர்த்து வைத்த 2334 ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.



வால்பாறை பகுதியில் வட்டாட்சியர் ராஜனிடம் சிறுமி மற்றும் அவரது தாயார் நாகரத்தினம் இணைந்து திமுக நகர பொறுப்பாளர் பால்பாண்டி மற்றும் வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கர் முன்னிலையில் இந்த உண்டியலை ஒப்படைத்தனர். உண்டியல் பணத்தை எண்ணிப்பார்த்தில் 2334 ரூபாய் இருந்தது. சிறுவயதிலே உதவி செய்ய வேண்டுமென்ற மனப்பக்குவம் உள்ள சிறுமியை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...