கோவை: கோவை மதுக்கரை அருகே குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை மதுக்கரை, மேட்டாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவரது மகன் ஆசிப் பாஷா, 17. நேற்று காலை அருகேயுள்ள எம்.ஜி.ஆர்., நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்திலுள்ள கல்லுக்குழிக்கு, 12 வயதான தனது நண்பனுடன், குளிக்க சென்றான்.
அங்கு சுமார், 40 அடி ஆழமுள்ள கல்லுக்குழியில், 20 அடிக்கு சேறு கலந்த நீர் உள்ளது. இதில் குதித்த ஆசிப் பாஷா வெளியே வரவில்லை. அதிர்ச்சியடைந்த உடன் சென்ற சிறுவன், அருகேயுள்ள தோட்டத்தின் உரிமையாளர் சண்முகத்திடம் சென்று, சம்பவம் குறித்து கூறியுள்ளான்.
இதையடுத்து, சண்முகம், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர், இரவு, 7:00 மணி வரை தேடியும் சடலத்தை மீட்க முடியவில்லை. பண்டிகை நாளில் சிறுவன் நீரில் மூழ்கியது, அப்பகுதியினரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.