கோவையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை ரூ.2,000 கொரோனா நிதி வழங்கும் பணி - அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்!

கோவை: கோவை மணீஸ் பள்ளியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணிகளை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.



கோவை: கோவை மணீஸ் பள்ளியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணிகளை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் தெரிவித்திருந்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்ற 7ம் தேதியே அதற்கான கோப்புகளில் முதலமைச்சர் முதல் கையெழுத்திட்டார்.

ஜூன் 3 கொரோனா நிவாரணம் வழங்க திட்டமிட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி தமிழகத்தில் 2 கோடியே, 7 லட்சத்து 66 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4,153 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 18 ஆயிரத்து 637 பயனாளிகளுக்கு ரூ.203.73 கோடி ஒதுக்கப்பட்டு முதல் தவணை ரூ.2 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் 163 கூட்டுறவுச் சங்கம் மூலம் 1,126 நியாய விலைக் கடைகளிலும், தமிழ்நாடு நுகர்வோர் வாணிக கழகத்தின் கீழ் உள்ள 54 நியாய விலை கடைகளிலும், மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் 103 நியாய விலை கடைகளில் என கோவையில் 1,401 நியாய விலை கடைகளில் அரசி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், இதற்காக கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டது.



மேலும் ஒரு நாளைக்கு தலா கடைக்கு 200 பயனாளிகளுக்கு மட்டுமே நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 50 பயணிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...