கோவை: மக்கள் உயிரைக் காக்க போராடும் மருத்துவர்கள் மீது மனிதாபிமானம் காட்டுங்கள் என கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்காக வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவை நிரம்பி வழிகின்றன.
மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதி பெற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கூட யாரும் இல்லை என கூறுகின்றனர். இதனால் மருத்துவர்கள், ஊழியர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் மருத்துவர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற பேரிடர் சமயத்தில், டாக்டர்கள் மனநிலையை புரிந்து கொண்டு, மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே மன அழுத்தம் இல்லாமல் பணியாற்ற முடியும், என டாக்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், “அனைவருக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடர்ந்து மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர். நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதற்கு ஏற்ப சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களிடம் உள்ள ஊழியர்கள் வைத்து சிறப்பாக பணியாற்றி வருகிறோம். ஆனால், நோயாளிகளின் உறவினர்கள் சிலர் டாக்டர்களின் பணிக்கு இடையூறு செய்கின்றனர். இது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. மக்களுக்காக போராடும் மருத்துவர்கள் மீதும், கொஞ்சம் மனிதாபிமானம் காட்டுங்கள். நாங்களும் மனிதர்கள் தான்" என்றார்.