கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு


வாங்கிய கடனுக்கு அதிகமாக வங்கிகள் வட்டி வசூலிப்பதால் வங்கிகளுக்கு பணம் செலுத்த கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களில் ஈடுபட அனுமதி வழங்கக் கோரி விவசாயி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (இன்று) விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர். இதனிடையே அன்னூர் அருகே குப்பேபாளையம் பகுதியை சேர்ந்த துப்பாக்கி வேலுசாமி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். 

அம்மனுவில் பயிர்க் கடனுக்கு வங்கிகள் அதிகளவு வட்டியை வசூலிப்பதால் அதனை திரும்ப செலுத்த முடியாமல் தவிப்பதாக தெரிவித்திருந்தார். எனவே தனது பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் இல்லையேல் விரைவாக பணம் சம்பாதிக்கும் வகையில் கொள்ளை, திருட்டுகள், கஞ்சா பயிரிடுதல், தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலுச்சாமி, காலம்காலமாக விவசாயம் செய்து வரும் தாங்கள் கடந்த சில ஆண்டுகள் வரை சரியான முறையில் வங்கி கடன்களை திரும்ப செலுத்தி அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்து போனது, மின்வெட்டு, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமை உள்ளிட்ட பிரச்சனைகளால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருவதாகவும், இந்நிலையில் வங்கிகளும் வாங்கிய கடனுக்கு மேல் வட்டி கட்டுமாறு மிரட்டுவதாகவும் வேதனை தெரிவித்தார். 

எனவே, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகளை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு முடியாத பட்சத்தில் வேறு வழியின்றி தங்கள் பிள்ளைகள் தீவிரவாதம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் அவல நிலை உருவாகும் எனவும் அவர் அப்போது வருத்தத்துடன் தெரிவித்தார்.

இதேபோல, கோவை பேரூர் பகுதியில் வாழை விவசாயம் செய்து வரும் விவசாயி வாழை பயிரிட்டு 1000 வாழைகளை அறுவடை செய்யும் நிலையில் இருப்பதால் மத்திய அரசு அறிவித்தப்படி 2.5 லட்சம் ரூபாய் மட்டுமே வங்கியில் கட்ட முடியும். ஆனால், ஒரு வாழை 500 ரூபாய் வீதம் விற்பனையாகிக்கொண்டிருக்கும் நிலையில் 5 லட்சம் வரும் பணத்தை வங்கியில் வைப்பு வைத்தால் வருமானவரித்துறை பிரச்சனை, வாழையை வாங்குபவர்கள் ரசீது கொடுக்காததால் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக அரசின் கீழ் விவசாயம் சார்ந்த பொருட்களை வாங்குபவர்கள் தங்களது நிறுவனத்தை பதிவு செய்வதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...