கொரோனா நிவாரண நிதியாக ஒருநாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு அரசு கல்லூரிப் பேராசிரியர்கள் முடிவு..!

கோவை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக, பேராசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில், கொரோனா நிவாரண நிதியாக, பேராசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர்.

கொரோனா முதல் அலையின் போதும், அரசு கல்லூரி பேராசிரியர்களின் சுய விருப்பத்துடன், அரசு ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்தது. இந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்துள்ள சூழலில், இம்மாதத்திற்கான ஊதியத்தில், ஒரு நாள் பங்கை பிடித்தம் செய்து விடுவிக்க வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி கூறுகையில், ''கோவை மண்டலத்தில், 11 கல்லூரிகளில் பணிபுரியும், சங்க உறுப்பினர்கள், 600 பேராசிரியர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். மாநிலம் முழுவதும், 5000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் ஒரு நாள் ஊதியத்தை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளனர். அரசு பிடித்தம் செய்துகொள்ள, கல்லூரி கல்வி இயக்குனருக்கு தெரிவிக்கவுள்ளோம். அவர் மூலம் கருவூலத்துறைக்கு அறிவுறுத்தப்படும்,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...