கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க 50 சோதனை சாவடிகளில் 1500 போலீசார் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கோவை: கோவையில் கொரோனா தொற்று தடுப்பு விதிமீறலில் ஈடுபடுவோரை கண்காணிக்க 50 சோதனை சாவடிகளில் 1500 போலீசார் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த போதிலும் பொதுமக்கள் பிரதான சாலைகளில் அதிக அளவில் தங்கள் வாகனங்களில் வெளியில் சுற்றித் திரிகின்றனர்.
இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகர பகுதிகளில் 50 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் இணை ஆணையர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது மக்கள் அதிக விழிப்புணர்வு முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே பெரும் தொற்று நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்தி பெரும் தொற்று நோயிலிருந்து பொது மக்களை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.