கோவை: பொள்ளாச்சியில் கொரோனா தொற்று தடுப்பு விதிமீறலில் ஈடுபட்டவர்களிடம் ரூ.2.89 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் எங்கும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில் மே மாதம் 24 ம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளுடன் பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் பொதுமக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர். ஆனால் பொதுமக்கள் அதை பொருட்படுத்தாமல் சாலைகளில் முககவசம் அணியாமல் சுற்றுகின்றனர். அரசு அறிவித்த விதிமுறைகளுக்கு உட்பட்ட கடைகளை தவிர மற்ற கடைகளை திறப்பது என விதி மீறல்களில் ஈடுபடுகின்றனர்.

விதிமீறலை கண்காணிக்க பொள்ளாச்சி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை உள்ளிட்ட தாலுகாக்களில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒன்பது குழுக்களும் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஒன்பது குழுக்களும் என பறக்கும் படை அமைத்து வருவாய் துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வரை பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் மட்டும் விதி மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு 2 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் நான்கு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.