கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள், கடைகளுக்கு அபராதம்- வருவாய்துறை நடவடிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி சார்பில் பல்வேறு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


கோவை: கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி சார்பில் பல்வேறு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, தமிழக அரசின் உத்தரவுபடி சமூக இடைவெளி, கட்டாயம் முகக் கவசம் அணிதல், 50% ஊழியர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை கடைபிடிக்காத தொழிற்சாலை மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்க வருவாய் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் வருவாய் துறையின் சார்பில் நாள்தோறும் அதிரடி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள வடபுதூர், சொலவம்பாளையம், அரசம்பாளையம் ஆகிய பகுதிகளில் வருவாய்த்துறையினர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டபோது, சில தொழிற்சாலைகளில் மற்றும் கடைகளில் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களில் மூன்று தொழிற்சாலை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்து வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து, தமிழக அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தொடர்ந்து பின்பற்றாமல் இருக்கும் கடைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...