கேரளத்தில் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்த கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை

கேரள மாநிலத்தில் 3 மாவோயிஸ்ட்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோவையில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக உள்ள மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்.



கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ரூபேஸ், சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புசட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  கோவை முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த குற்றப்பத்திரிகைகளின் சுமார் 4200 பக்க நகல்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு வெள்ளியன்று (இன்று) வழங்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பு கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். 



இதற்கு முன்னதாக, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட மாவோயிஸ்ட்கள், கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் 3 பேரை சுட்டுக்கொன்றதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சுட்டு கொல்லப்பட்ட 3 பேரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மாவோயிஸ்ட்கள் 5 பேர் மீதும் காவல் துறையினர் போலி ஆவணங்களை பயன்படுத்து சிம்கார்டு வாங்கியதாக தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 28 பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது குற்ற வழக்குகள் இல்லாத போதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் அவர்களது தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்தார். 

மேலும், மாவோயிஸ்ட்டுகள் மீது சிறையில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும் நீதிபதியிடம் மாவோயிஸ்ட்கள் புகார் தெரிவித்ததாகவும், சிறை கண்காணிப்பாளர் மூலம் புகார் தெரிவிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியதாகாவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து மாவோயிட்கள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...