வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பணி நேரத்தை குறைக்கும்படி திமுக கூட்டணி கோரிக்கை!

கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுக கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பணி நேரத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுக கூட்டணி கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் குழு உறுப்பினர் ஆறுமுகம், திமுக தொழிற்சங்க தலைவர் வினோத், விடுதலை சிறுத்தை கட்சி தொழிற்சங்க தலைவர் கேசவன் முருகன்உள்ளிட்டோர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது;

“வால்பாறையில் 56 தேயிலை தோட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போது தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் 5 மணி வரை என பணியாற்றுகின்றனர். முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. எனவே தேயிலை தோட்டப் பகுதிகளில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. போதுமான கொரோனா தடுப்பு உபகரணங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தொழிலாளர்களுக்கு முகக் கவசங்கள் கையுறைகள் வழங்கவில்லை.

பணிபுரியும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அனுமதிக்கவில்லை. எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை என குறைக்க வேண்டும். அதன் பின்பு அவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு தர வேண்டும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலன் காக்க தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.” இவ்வாறு திமுக கூட்டணி கட்சியினர் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...