கோவை: கோவையில் குடி தண்ணீர் தொட்டியில் தண்ணீர் வருகிறதா? என பார்க்கச் சென்ற பெண், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் ரோட்டை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மனைவி சித்ரகலா(59), மதியம் கணவருக்கு உணவு பரிமாறினார். அப்போது, குழாயில் குடிநீர் வரும் சத்தம் கேட்டு வீட்டின் முன் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியைப் பார்க்கச் சென்றார். 30 நிமிடங்களுக்கு மேலாகியும் சித்ரகலா வராததால் சம்பத் வெளியே வந்து பார்த்தார். எட்டு அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பியிருந்த தொட்டியினுள் சித்ரா தவறி விழுந்து இருப்பது தெரிந்தது.
உடனே பதறிய சம்பத், பக்கத்தில் வசிப்போர் உதவியுடன் மனைவி சித்ரகலாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். சித்ரகலாவை பரிசோதித்த டாக்டர், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.