திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஊரடங்கில் தளர்வு கூடாது என தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை ரத்து செய்து முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளை ரத்து செய்து முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், ஏராளமான பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் 100 பேர் முதல் 1000 பேர் வரை ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றக்கூடிய நிலை உள்ளது. இந்நிலையில் திருப்பூரில் நடைபெற்ற அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டத்தில், “கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வை ரத்து செய்து முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

இ.எஸ்.ஐமருத்துவமனையில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்,” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் கடிதமாகவும் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...