கோவை: கோவையில் கொரோனா விதிமுறையை கடைப்பிடிக்காத கடைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் முக்கிய கடைகள் காலை முதல் 12 மணி வரை திறந்து இருக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சிதுறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து முழு ஊரடங்கு விதிமுறைகள் மீறப்படுகின்றனவா என தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாநகராட்சி அதிகாரிகள் கோவை 100 அடி சாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது விதியை மீறி கடையை திறந்து வைத்திருந்த கமலா ஸ்டோர் கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ 5,000 அபராதம் விதித்தனர். அதனைத்தொடர்ந்து கடை உரிமையாளரிடம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.