கோவை: கிணத்துக்கடவு சந்தைக்கு வியாபாரிகள் வராததால் காய்கறிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் அறுவடை செய்யும் தக்காளி, பச்சை மிளகாய், தட்டை பயறு, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும். விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நண்பகல் 12 மணி வரையும் மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கபடுவதால் வியாபாரம் குறைந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக கிணத்துக்கடவு சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வரவில்லை.

இதனால், விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. நண்பகல் 12 மணிக்கு மேல் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் கொண்டு வந்த காய்கறிகளை திருப்பி எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் காய்கறிகள் எளிதில் அழுகும் என்பதால் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை என்ன செய்து என்று தெரியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.