கோவை: கோவை விமான நிலையம் சிறப்பான முறையில் நோய் தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவதால் இன்று வரை பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள், ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், வீரர்கள், ஏர்லைன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட 1,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்றைத் தடுக்ககடந்த ஓராண்டுக்கு மேலாக மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டும் விதிமுறைகளைஅமல்படுத்தி வருகின்றன. இந்த வழிகாட்டி விதிமுறைகளை சிறப்பான முறையில் பின்பற்றி வரும் காரணத்தால் கோவை சர்வதேச விமான நிலையத்தில் இன்று வரை பத்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டனர். நோய் தொற்றில் இருந்து மீண்டும் வந்துள்ளனர்.
இது குறித்து கோவை ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில்,"கோவை சர்வதேச விமான நிலையத்தில் வழிகாட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பது மட்டுமின்றி, கடும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதிகாரிகளாக இருந்தாலும் ஊழியர்களாக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அனைவரும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆயிரம் பேர் பணியாற்றக்கூடிய ஒரு இடத்தில் கடந்த ஓராண்டாக பத்துக்கும் குறைவான நபர்கள் மட்டுமே நோய் தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர். அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணியாற்றக்கூடிய ஒரு இடத்தில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்துவதில் கோவை விமான நிலையம் முன்மாதிரியாக விளங்குவதில் சந்தேகமில்லை. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பே காரணம்,"என தெரிவித்தன.