கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க இரண்டு அமைச்சர்கள் நியமனம்..!

கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்புக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு அமைச்சர்களை நியமித்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.


கோவை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின், கொரோனா தடுப்புக்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு அமைச்சர்களை நியமித்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க இரண்டு அமைச்சர்களை நியமித்துள்ளார். இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவை பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் மிக எளிமையாக நடைபெற்றது. என்றாலும், அன்று மாலையே கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டதால், கடைசி நேரத்தில் அமைச்சரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், நேற்று காலை 11.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பத்தாவது தளத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உட்பட அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

அப்பொழுது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி கோவைக்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் முழுமையாக அந்தந்த மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள், முழு ஊரடங்கு, சிறப்பாக அமல்படுத்துவது, நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை, ஆக்ஸிஜன் வீண் போகாமல் பாதுகாப்பது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அந்தந்த அமைச்சர்கள் இன்று அவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குச் சென்று தங்களுடைய பணிகளைத் தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...