பொள்ளாச்சி: இன்று முதல் தமிழகமெங்கும் பொதுமுடக்கம் அமல்படுத்திய நிலையில், பொள்ளாச்சி சாலை எங்கும் வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் இன்று பொது முடக்கம் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொள்ளாச்சியில் வாகன நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கடைவீதி, போலீஸ் ஸ்டேஷன் வீதி, வெங்கட்ரமணன் வீதி, மார்க்கெட் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. போலீஸார் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றார்கள். பொள்ளாச்சிப் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளதால் அமைதியான சூழ்நிலை நிலவியுள்ளது.