முன்னாள் ராணுவ டாக்டர்களை மீண்டும் தேர்வு செய்து பணியமர்த்த உத்தரவு..!

சென்னை: ராணுவத்தில் குறுகிய கால சேவையில் மருத்துவர்களாக பணியாற்றிய 400 பேரை, மீண்டும் தேர்வு செய்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை: ராணுவத்தில் குறுகிய கால சேவையில் மருத்துவர்களாக பணியாற்றிய 400 பேரை, மீண்டும் தேர்வு செய்து ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுக்கு இடையே விடுவிக்கப்ப்ட குறுகிய கால பிரிவு சேவையில் பணியாற்றிய மருத்துவர்கள் 400 பேரை மீண்டும் தேர்வு செய்து 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு இயக்குநரகத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘டூர் ஆப் ட்யூட்டி’ திட்டத்தின் கீழ் இவர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.

இதற்காக நேற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஓய்வு பெற்றபோது பெறப்பட்ட சம்பளத்தில், அடிப்படை ஓய்வூதியத் தொகையைப் பிடித்தம் செய்து மாத சம்பளத்தை நிர்ணயிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கோவிட் சூழ்நிலையில், உள்ளூர் நிர்வாகத்துக்கு உதவ, கூடுதல் படையினரை அனுப்புவது உட்பட பல நடவடிக்கைகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.

பல மருத்துவமனைகளுக்கு சிறப்பு நிபுணர்கள் உட்பட கூடுதல் மருத்துவர்கள், கூடுதல் மருத்துவப் பணியாளர்களை ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு ஏற்கெனவே அனுப்பியுள்ளது.

குறுகிய கால பணியில் உள்ள டாக்டர்களுக்கு 2021 டிசம்பர் 31ஆம் தேதி வரை பணிக்கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவுக்கு கூடுதலாக 238 மருத்துவர்கள் கிடைப்பார்கள். ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவர்களை மீண்டும் நியமிப்பதன் மூலம் ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவு மேலும் வலுப்பெறும்.

இ-சஞ்சீவனி ஓபிடி தளத்தில் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கும் பணியில் ராணுவ முன்னாள் மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சேவையை https://esanjeevaniopd.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.

முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு மற்றும் சுகாதார திட்டத்தின் (ECHS) 51 மருத்துவமனைகளில் மூன்று மாதங்கள் இரவு பணியில் ஈடுபட ஒப்பந்த ஊழியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சை பெறும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கவனித்துக் கொள்வர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...