கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு திருப்பூரில் அமலுக்கு வந்தது..!

திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு திருப்பூரில் அமலுக்கு வந்தது.. ஆயினும், திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்குவதில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு திருப்பூரில் அமலுக்கு வந்தது.. ஆயினும், திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் இயங்குவதில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு இன்று முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்த உத்தரவு வெளியிட்டிருந்தது. இருப்பினும் இதில் மளிகை கடைகள், பேக்கரி, உணவகங்கள் செயல்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.



இதனால், அரசு தனியார் பேருந்துகள் எதுவும் இயங்கவில்லை. பொதுமக்களின் அத்தியாவசிய வாழ்க்கை பாதிக்காதவாறு அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஏற்கெனவே தமிழக அரசு முகக்கவசம், முழு கவச உடை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து இருக்கும் சூழ்நிலையில் மற்ற பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்படுவதில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையான அறிவிப்பு வெளியிடாததால் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பாக, பின்னலாடை நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்படும் வகையில் பின்னலாடை நிறுவனங்களே பணியாளர்களுக்கான வாகனத்தை ஏற்பாடு செய்து சமூக இடைவெளி உடன் அழைத்து வர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாததால் தொழிலாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே மாநகரில் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலித்தனர். மேலும், பனியன் நிறுவனங்கள் வேன் மூலம் மட்டுமே தொழிலாளர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை எனவும் தெரிவித்தனர். இதேபோல் அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து சாலையில் வரும் வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...