கோவை: கொரோனா நிவாரண நிதி, முதற்கட்டமாக 2,000 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவையில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். இதில் ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக இந்த மாதம் ரூ.2 ஆயிரமும், அடுத்த மாதம் மீதி ரூபாய் ரூ.2 ஆயிரமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று கோவையில் டோக்கன் விநியோகம் செய்து, அதன் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களை வரவழைத்து கொரோனா நிவாரண தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோவையில் பல்வேறு பகுதிகளில் 2000 ரூபாய்க்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி டோக்கன் வாங்குவதால் டோக்கன் வழங்கும் பணி அவ்விடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.