வால்பாறை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில், வால்பாறையில் சம்பள வாரத்தை முன்னிட்டு வங்கிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் தொற்றுப் பரவல் இன்னும் அதிகரிக்குமோ என்கிற அச்சம் நிலவுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கான மாத ஊதியம் பிரதி மாதம் 7ஆம் தேதி வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றது அனைத்து வங்கிகளும் அதன் ATM களும் வால்பாறை நகரத்தில் உள்ளன. மேலும், அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான நகரமும் வால்பாறைதான்.

இந்தநிலையில், தமிழ்நாடு அரசு கொரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. சம்பளப் பணத்தை எடுப்பதற்காகவும் பொருட்களை வாங்குவதற்காகவும் தேயிலைத் தோட்டப் பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வங்கிகளின் ஏடிஎம் முன் முகக்கவசம் அணியாமலும் தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் கூட்டம் கூட்டமாக குவிந்து உள்ளனர். இதன் காரணமாக, கொரோனா பரவும் அபாயம் உள்ளது. வால்பாறையில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.