பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடைகால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி ஆறு நாட்களுக்கு நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி ஆகிய நான்கு வனச்சரகங்களில் இன்று கோடை கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.



நான்கு வனசரங்களில் அமைக்கப்பட்டுள்ள 62 நேர்கோட்டுப் பாதையில் 130க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதில் வனப்பகுதிக்குள் குறைந்தபட்சம் ஐந்து கிலோ மீட்டர் அளவுக்கு சென்று அங்குள்ள மாமிச உண்ணி, தாவரம் உண்ணி விலங்குகளையும் அதேபோல் வனவிலங்குகள் எச்சம், கால்தடம் ஆகியவையும் கணக்கிடப்படுகிறது.

இதேபோல், அடுத்த மூன்று நாட்களுக்கு 62 நேர்கோட்டுப் பாதையில் சென்று, வனவிலங்குகளுக்குத் தேவையான உணவு வகைகள், வாழ்விடங்கள் போன்றவை கணக்கு எடுக்கப்படுகிறது.

இன்று பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட நவமலை பகுதியில் வனத்துறை ஊழியர்கள் வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனத்திற்குள் சிறுத்தையின் கால் தடம், மரங்களில் உள்ள கீறல்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டன.

ஆறு நாட்கள் நடைபெறும் கணக்கெடுப்பின் பதிவுகளின் அறிக்கை தலைமை வனப்பாதுகாவலருக்கு அனுப்பப்படும் என்று வனத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...