வால்பாறை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் வீச்சு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அதனைத் தடுக்கும் நடவடிக்கையாக, வால்பாறை நகராட்சியில் சுகாதாரத் துறை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரானா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். வால்பாறை சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக வால்பாறை நகராட்சி சுகாதாரத்துறை சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கை கழுவும் திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்தபின் அவர்களுக்கு கபசுர குடிநீர் குடிக்க வழங்கப்படுகிறது. வால்பாறை தபால் நிலையம், நகராட்சி அலுவலகம் வளாகம், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை பேருந்து நிலையம், ஸ்டான் மோர் சந்திப்பு மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்களும் ஆர்வமாக வாங்கிக் குடித்துச் செல்கின்றனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், 'இந்த கபசுர குடிநீர் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறும்' என்று தெரிவித்தனர்.