Coimbatore: 'கொரோனா' நோய்த்தொற்று பரவல் காரணமாக தொழில்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்கவும், இந்த நெருக்கடியான சூழலை தொழில்துறையினர் எதிர்கொண்டு கடக்க என்ன உதவிகள் அரசு செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளவும் சென்னையில் நாளை சிறப்பு கூட்டம் நடக்கிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 4:30 மணிக்குநடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழில் துறையினர் பங்கேற்க உள்ளனர்.
கோவையிலிருந்து, கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம்( கொடிசியா) உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழலை தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள நிலையில் முதலமைச்சர் தாமாக முன்வந்து தொழில் துறையினரை அழைத்து கூட்டம் நடத்துவது தொழில் துறையினர் மத்தியில் மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளது.