குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண தொகை வழங்க கோரிக்கை!

கோவை: குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண தொகை வழங்க தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களுக்கு நிவாரண தொகை வழங்க தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா நோய் தொற்று பரவலின் இரண்டாவது அலை அனைத்து தரப்பிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின்(TACT) மாவட்டத் தலைவர், ஜேம்ஸ் கூறியதாவது,

"கொரோனா நோய் தொற்று பரவல் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் குறுந்தொழில் துறையினர் மீண்டு வராத சூழலில் இரண்டாவது அலை நோய் தொற்று மிக வேகமாக பரவி வருவது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் செயல்படும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறுந் தொழில் நிறுவனங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும் குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் நிறுவனங்கள் ஈட்டும் ஆண்டு வருவாய் கணக்கிட்டு அதில் 10 சதவீதத்தை நிவாரணமாக வழங்க வேண்டும். தவிர மத்திய அரசுடன் பேசி குறுந்தொழில் மற்றும் குடிசைத் தொழில் நிறுவனங்கள் வாங்கிய வங்கி கடனுக்கான வட்டியை ஓராண்டுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக மாவட்டம்தோறும் கலெக்டர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தி குறுந் தொழில் மற்றும் குடிசை தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த "எம்எஸ்எம்இ" தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை குறித்து தொழில் துறையினரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

'கொரோனா' நோய் தொற்று கொடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை விட 'பசியும்', 'நிதி நெருக்கடியும்' மிகக் கொடியது. அரசு உதவி இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் காணாமல் போகும் நிலை உருவாகும்." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...