முன் களப் பணியாளர்களான ஊடக நண்பர்களுக்கு ஆன் லைனில் யோகா வகுப்புகள்... இலவசமாக நடத்த ஈஷா அறக்கட்டளை திட்டம்..!

கோவை: கொரோனா இரண்டாவது அலையைக் கவனத்தில் கொண்டும், முன் களப் பணியாளர்களான ஊடக நண்பர்களின் நலனை கருத்தில் கொண்டும் வரும் 8-ம் தேதி பிரத்யேக யோகா வகுப்புகளை ஆன்லைன் முறையில் இலவசமாக நடத்த ஈஷா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.



கோவை: கொரோனா இரண்டாவது அலையைக் கவனத்தில் கொண்டும், முன் களப் பணியாளர்களான ஊடக நண்பர்களின் நலனை கருத்தில் கொண்டும் வரும் 8-ம் தேதி பிரத்யேக யோகா வகுப்புகளை ஆன்லைன் முறையில் இலவசமாக நடத்த ஈஷா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பால் நாம் முன்னெப்போதும் இல்லாத ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறோம். இந்த சமயத்தில் ஊடகத்தில் பணியாற்றுபவர்களின் பணி கூடுதல் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. செய்தி சேகரிப்பதற்காக தொடர்ந்து களத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

இந்தப் பெருந்தொற்று காலத்தில் ஒருவர் உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியுடனும், நன்கு இயங்க கூடிய நுரையீரல் திறனையும் பெற்று இருப்பது மிக அவசியம். இதன் அடிப்படையில், முன் களப் பணியாளர்களான ஊடக நண்பர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வரும் 8-ம் தேதி பிரத்யேக யோகா வகுப்புகளை ஆன்லைன் முறையில் இலவசமாக நடத்த ஈஷா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

45 நிமிடங்கள் நடக்கும் இவ்வகுப்பில் நீங்களும் உங்கள் குடும்பத்தினர்களும் பங்கேற்கலாம். இதில் 3 நிமிடங்களில் செய்யும் எளிய யோக பயிற்சிகளை ஈஷா யோகா ஆசிரியர் கற்றுக்கொடுப்பார். இவ்வகுப்பில் நீங்கள் உங்கள் இருப்படத்தில் இருந்தப்படியே பங்கேற்கலாம்.

சத்குருவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த யோகாவின் பயன்கள்:

1. நுரையீரல் திறன் அதிகரிக்கும்

2. நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்

3. மூச்சு விடுவதில் ஏதேனும் சிரமம் இருந்ததால் அதை கண்டறிய முடியும்

விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட விவரங்களை [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம்.

பெயர்:

பணியாற்றும் ஊடகத்தின் பெயர்:

பதவி:

ஊர்:

வீட்டு முகவரி:

மொபைல் எண்:

இமெயில் முகவரி:

- இவ்வாறு ஈஷா அறக்கட்டளையின் திட்டத்தினை KaarthikKumar 98404 55323 என்பவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூர் மாவட்டம்: அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 27ஆம் தேதி நிலவரப்படி 41.43 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடி...

கோவை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரிப்பு பயிற்சி முகாம்

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் ஜூலை 29, 30 தேதிகளில்...

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...