கோவை: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு தற்காலிக சபாநாயகராக பதவி வகிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.,க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பது வழக்கம். இதற்கு ஆளும் கட்சி சார்பில் மூத்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். அந்த வகையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவை தற்காலிக சபாநாயகராக பதவி வகிக்கும் வாய்ப்பை வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி வாய்ப்பு அளிக்கப்படும் பட்சத்தில் ஜவாஹிருல்லாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை பதவி பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்பதற்கு சட்டசபை கூடும். அப்போது சட்டசபையில் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து புதிய உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது 2011 -ம் ஆண்டு இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தபோது செம்மலை தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இந்த முறை மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவஹருல்லா வுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.