கோவை: கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில், வானதி சீனிவாசன் வாக்காளர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் வானதி சீனிவாசன், ‘‘கோவை சட்டமன்றத் தொகுதியில் எனக்காக வாக்களித்த, தேர்தல் பணியாற்றிய பாஜக, அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிகள். இந்தப் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற பெரிதும் உதவிய எஸ்.பி.வேலுமணி, அர்ஜுனன் ஆகியோருக்கு நன்றிகள்.
என்னைப் போன்றே வெற்றிபெற்ற அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் வாழ்த்துகள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள் ஆக்கப்பூர்வமான வகையில் எந்தெந்த வகையில் எல்லாம் மத்திய அரசின் உதவியைப் பெற முடியுமோ, அந்த வகையில் மாநில வளர்ச்சிக்கு பங்காற்றுவோம். தேர்தல் அறிக்கையில் சொன்னதை எல்லாம் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் உதவியுடன் தொகுதிக்கு அப்பணிகளை செய்வோம்.
எந்தவித கூட்டங்கள் இல்லாமல் தொகுதி மக்களுக்கு நன்றி, திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து செயல்படுவோம். மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. மக்களுக்கு உதவிகள் செய்வதைத்தான் இந்த நேரத்தில் வெற்றிக் கொண்டாட்டமாகப் பார்க்கிறோம்.'' என்றவர், ‘‘எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து அழுத்தம் கொடுக்கப்படுமா'' என்ற கேள்விக்கு, ‘‘கட்சித் தலைமைதான் முடிவு செய்யும்'' என்றார்.