திருப்பூர்: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை இன்று ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி நடைபெற்றது இதில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம் அவினாசி, பல்லடம், மடத்துக்குளம், உடுமலை, ஆகிய எட்டு சட்டமன்ற தொகுதிகளில் 69.49 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது.
இதனிடையே பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையமான எல்.ஆர்.ஜி மகளிர் கல்லூரியானது துணை இராணுவத்தினர் உட்பட ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தநிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்பவர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல் கொரோனா பரவல் அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையால் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்பவர்களுக்கு முகக்கவசம், சேனிடைசர் வழங்கப்படுவதோடு, சமூக இடைவெளியைப் பின்பற்றக் கோரி வலியுறுத்தப்படுகின்றனர். அதேபோல், தேர்தல் ஆணைய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவது குறிப்பிடதக்கது.