கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவாக நாட்டுத் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்ததோடு கிணறுகளிலும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் நாட்டு தக்காளி அதிகளவில் சாகுபடி செய்ததால் விளைச்சல் அதிகமாக காணப்பட்டது.
அண்மைக்காலமாக, கிணத்துக்கடவு காய்கறி மார்க்கெட்டுக்கு அதிக அளவில் தக்காளி வரத்து இருந்து வந்தது. 15 கிலோ எடை கொண்ட நாட்டுத் தக்காளி 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை மட்டுமே ஏலம் போனது.

இதனால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளியை பறிக்காமல் செடியிலேயே, விவசாயிகள் விட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களாக தக்காளியின் வரத்து குறைவாகவே காணப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி, கிணத்துக்கடவு மார்க்கெட்டில் ஒரு கிலோ நாட்டுதக்காளி 7 ரூபாய்க்கு ஏலம் போனதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.