கிணத்துக்கடவு அருகே டிப்பர் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயம்!

கோவை கிணத்துக்கடவு அருகே டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்த ஆறுமுகம் (38).நேற்று மதியம் தனது டிப்பர் லாரியில்சிங்கையன்புதூர்கல்குவாரியில் இருந்து முத்தூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த மற்றொரு டிப்பர் லாரி ஆறுமுகம் ஒட்டி வந்த டிப்பர் லாரி மீது பலமாக மோதியது. இதில் ஆறுமுகம் ஒட்டி வந்த டிப்பர் லாரியின் முன்புறம் சுக்குநூறாக நொறுங்கியது. இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த ஆறுமுகம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சுந்தரா புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள கிணத்துக்கடவு போலீசார் லாரி டிரைவர் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...