கோவை: வால்பாறையில் கோடை மழை பெய்து வரும் நிலையில், காபி செடியில் பூத்துக் குலுங்கும் பூக்களால் விளைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆரம்ப காலத்தில் அனைத்துப் பகுதிகளும் காப்பி தோட்டங்களாக இருந்து வந்தன. தற்போது சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே காப்பி தோட்டங்கள் உள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு தேயிலைத் தோட்டங்களாக மாறிவிட்டன.

இதனிடையே, கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காப்பித் தோட்டத்தில் செடிக்கு தேவையான சம சீதோசன நிலை நிலவுகிறது.
இதனால் காப்பி செடியில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதே பருவநிலை தொடர்ந்து நீடிக்குமானால் காபி செடியில் உள்ள அனைத்துப் பூக்களும் காய்களாக மாறும். காப்பி விளைச்சலும் அதிகரிக்கும். இதனால் காப்பித் தோட்ட நிர்வாகங்கள் காப்பி செடிக்கு உரங்கள் போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.