கோவை: பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்த வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்யும் வகையில் இரண்டு இடங்களில் தானியங்கி சானிடைசர் தெளிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புகைப்படங்கள் எடுக்க இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அலுவலகத்திற்குள் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது எனவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தெரிவித்தார்.