9-வது வார்டில் பாலித்தீன் பைகள் குறித்து மாநகராட்சி ஆணையர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 59-வது வார்டு ஆர்.கே.கே. நகர் பகுதியில் பாலித்தீன் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது, 50 மைக்கரான் குறைவாக உள்ள பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து, ஒரு கடையின் உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகளை உபயோகிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் அபேட் மருந்தினை நீர் தொட்டிகளில் ஊற்றுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி ஆணையருடன் துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி நகர்நல அலுவலர் எம்.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...