வால்பாறை நகருக்குள் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்!

வால்பாறை: வால்பாறை நகருக்குள் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறை நகருக்குள் சிறுத்தை நடமாடுவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு ஏராளமான புலி, சிறுத்தை, கரடி யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன.

காட்டுக்குள் இருக்கும் வனவிலங்குகள் அடிக்கடி மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு வந்து வீட்டில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்துகின்றன. இது தவிர மனிதர்கள் மீது பாய்ந்து படு காயப்படுத்துவதும், சில நேரங்களில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டு சிலர் உயிரிழப்பது தொடர்கதையாக இருக்கிறது.

இது தவிர குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தை நாய், ஆடு, மாடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளையும் அடித்துக் கொன்று தின்கிறது.



இந்நிலையில் வால்பாறையின் முக்கிய பகுதியான வாழைத்தோட்டம் பிரதான சாலையில் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று நடமாடியதை காரில் வந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்கள்.

இச்சம்பவம் வால்பாறை நகரில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. வனத்துறையினர் தகுந்த ரோந்து பணிகளை மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...