கோவை: வானதி சீனிவாசனை விமர்சிக்கும்போது உபயோகித்த துக்கடா என்ற வார்த்தை தரக்குறைவானது அல்ல என்று மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு அலாப்ட் ஓட்டல் வளாகத்தில் நடந்தது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கை வரவேற்பு பெறும்
இதனைத் தொடர்ந்து சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் டாக்டர் மகேந்திரன் பேசியதாவது:

“அனைத்து வார்டுகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் மக்கள் நற்பணி மையங்கள் அமைக்கப்படும். குறு சிறு தொழில்களுக்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். பெண்களின் வாழ்க்கை தரம் மேம்பாடு அடையத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தொகுதி முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். சிங்காநல்லூர் தொகுதியில் மேலும் ஒரு அரசு மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து உணவு பதப்படுத்துதல் பூங்கா நிறுவப்படும். சிறுவர்களுக்கான மைதானங்கள் மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கான இட வசதி செய்து தரப்படும். இந்த தேர்தல் அறிக்கையானது வாக்காளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறும் என நம்பிக்கை இருக்கிறது.” இவ்வாறு மகேந்திரன் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது:

“கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து நடந்த பரப்புரையின்போதுநடந்த சம்பவம் குறித்து நான் விமர்சித்தால் அது என் தரத்தை நானே குறைத்துக் கொள்வது போன்றதாகும். இச்சம்பவத்துக்கு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே அது குறித்துப் பேச எனக்கு விருப்பம் இல்லை. துக்கடா என்ற வார்த்தை என்னை பொறுத்தவரை தரக்குறைவான வார்த்தை அல்ல.
குறுந் தொழில்கள், குடிசைத் தொழில் செய்வோர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன். குறுந்தொழில் பேட்டைகள் அமைக்கப்படும். குறிப்பாக நிதி உதவி செய்வதற்கு என பிரத்தியேகத் திட்டத்தை செயல்படுத்துவேன்.” இவ்வாறு கமலஹாசன் தெரிவித்தார்.