பெண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழகம்..! திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது - யோகி ஆதித்யநாத்

கோவை: திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கோவை பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.


கோவை: திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கோவை பிரச்சாரத்தில் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.



பின்னர், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு வந்து வழிபட்டு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வானதி சீனிவாசனுக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதனை தொடர்ந்து, புலியகுளம் பகுதியில் இருந்து இருசக்கர வாகன பேரணி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டு தேர்நிலை திடலை வரை பேரணியாக வந்தனர். அங்கு பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



பொதுக்கூட்ட மேடையில் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆசிர்வாதம் பெற்றார்.

இதனை தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசும் போது, "கோவை மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என தமிழில் பேசி உரையை துவங்கினார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உரையை, பா.ஜ.க தேசிய இளைஞரணி துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் மொழி பெயர்த்தார்.

அப்போது அவர் பேசியதாவது:



கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார். மேலும், ராமரின் புண்ணியபூமி உத்திரபிரதேசம் என தெரிவித்த அவர், உ.பியில் கட்டப்படும் ராமர் ஆலயத்தின் நிர்மாணத்திற்காக 120 கோடி ரூபாயை இந்த தமிழக மண் வழங்கி இருக்கின்றது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

டிபன்ஸ் காரிடர் அமைக்க கோவையை பிரதமர் தேர்வு செய்து இருக்கின்றார் என தெரிவித்த அவர், இது சுயசார்பு பாரதத்தை பறைசாற்றும்படி இருக்கும். இந்த டிபன்ஸ் காரிடர் அமைந்து முடியும் போது ஏராளமான வேலை வாய்ப்பு பெருகும்.

இந்தியா முழுவதும் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது என்றும் மேற்கு வங்கம், அஸ்லாம், கேரளா மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றேன் என தெரிவித்த அவர், வரும் தேர்தல்களில் அஸ்ஸாம், மேற்கு வங்கம் மாநிலங்களில் நிச்சயம் பா.ஜ.க ஆட்சி அமையும் என்று கூறினார்.



மேலும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் எனவும் தமிழகத்தில் அதிமுக, பா.ஜ.க கூட்டணி மட்டுமே புதிய விடியலை ஏற்படுத்தும் என கூறிய அவர், இந்தியாவில் பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அதிகப்படியாக நிதி, திட்டங்கள் தமிழகத்தை வந்து சேரும் என்றார்.

மேலும், பெண்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்ற மாநிலம் தமிழகம். பெண்களுக்கு பாதுகாப்பு அதிமுக, பா.ஜ.க அரசுகளால் மட்டுமே பாதுகாப்பு கொடுக்க இயலும். இந்த மண்ணில் திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்து விட்டால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது, பெண்களுக்கு எதிரானவர்கள் அவர்கள், பெண்களுக்கு எதிராக செயல்படும் திமுக, காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறினார்.



கொரோனா நோய்தொற்றால் ஒரு வருட காலமாக நாடு நெருக்கடியில் இருந்த போது பிரதமரின் நல்ல திட்டங்களின் மூலமாக கொரொனா தொற்று குறைந்து இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்தை முன்னிட்டு தேர்நிலை திடல் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பிற்காக அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கடைகளையும் அடைக்க கோரி காவல்துறையினர் அப்பகுதியில் இருந்தவர்களை அறிவுறுத்தியிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...