கோவை: சிறுகுறு தொழில்கள் வளர்ச்சிக்கு நிதி உதவி செய்வதாக கொடிசியா சங்கப் பிரதிநிதிகளிடம் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் வாக்குறுதி அளித்திருக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கொடிசியா வளாகத்தில், கோவை மாவட்ட சிறு, குறு தொழில்கள் சங்கத்தின் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அப்போது அவர்களிடம், கொடிசியா வளாகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி திறன்மேம்பாட்டு மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச திரைப்படவிழா போன்றவை கோவை நகரில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்கு பல்வேறு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமல் உறுதியளித்தார்.

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை வரவேற்பதாக கொடிசியா சங்க நிர்வாகிகள் தெரிவித்ததுடன் கோவை நகர வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கோரிக்கையை கமல்ஹாசனிடம் வழங்கினர்.