கோவை: கோவை புறநகர் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 4,400 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓட்டுச்சாவடிகள் பிரச்சனை இல்லாத பதட்டமான மிகவும் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் என பிரிக்கப்பட்டு அதற்கேற்றாற்போல வாக்குச்சாவடிகளை போலீசார் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், பிரச்சனையில்லாத ஓட்டுச்சாவடிகளில் 4 முதல் 6 போலீசாரும், பதட்டமான மற்றும் மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் அதிகளவு போலீசாரும், மத்திய அதிரடிப்படை வீரர்களும் பணியமர்த்தப்படுவர். மாவட்டத்துக்கு இதுவரை 9 கம்பெனி துணை ராணுவம் வந்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை மூவாயிரத்திற்கும் அதிகமான ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இந்த ஓட்டுச்சாவடிகளில் 4,400 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக தற்போது கோவை மாவட்ட போலீசார், துணை ராணுவத்தினர், என்.எஸ்.எஸ் மாணவர்கள், முன்னால் போலீசார், ராணுவத்தினர், உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-
கோவை மாவட்டத்திற்கு ஏற்கனவே 9 கம்பெனி துணை ராணுவம் பணி அமர்த்தப்பட்டு உள்ளது. இது தவிர என்.எஸ்.எஸ் மாணவர்கள் மட்டும் 1,500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர், போலீசார், வனத்துறையினர் என 500 நீலகிரி கோவை மாவட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து ஊர்க்காவல் படையினர் 650 பேர் வரவுள்ளனர். மாவட்ட போலீசார் 1,500 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 400 பேர் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
இதுதவிர தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர் போலீசார் என 500 பேர் வருகின்றன. தேவை போக மீதமுள்ள 400 பேர் தேவைப்படும் போது பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.