கோவை வடக்கு: கோவை கொங்கு நகரில் யோகா பயிற்சி மையத்துடன் கூடிய பூங்கா அமைத்து தரப்படும் - அம்மன் அர்ஜூனன்

கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகள் கட்டப் பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், என அதிமுக கோவை வடக்கு வேட்பாளர், அம்மன் அர்ஜூனன் குற்றம் சாட்டியுள்ளார்.



கோவை: திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகள் கட்டப் பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், என அதிமுக கோவை வடக்கு வேட்பாளர், அம்மன் அர்ஜூனன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிட கூடிய அம்மன் அர்ஜுனன், நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒரு நாட்கள் ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் நேற்று மாலை பிரச்சாரத்தை தொடங்கினார்.

கோவை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட காந்திமாநகர், கொங்கு நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்த போது, கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். திமுக ஆட்சியில் தான் நில அபகரிப்புகள் அதிகமாக இருந்தன. தொடர்ந்து, கட்டப்பஞ்சாயத்துகளும் அதிகரித்தன. அடுத்து ஆட்சிக்கு வந்த அம்மா, நில அபகரிப்பு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதிக எண்ணிக்கையிலான நில அபகரிப்பு வழக்குகள் திமுகவினர் மீது தான் பதிவு செய்யப்பட்டது. எனவே, மீண்டும் தமிழகத்தில் திமுக வர அனுமதிக்கக் கூடாது.

கோவை கொங்கு நகரில் அதிமுக ஆட்சியில் தான் தரமான தார் சாலைகள் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. மேலும், மழைநீர் வடிகால் மற்றும் பூங்கா அமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ரெண்டு ஏக்கர் பரப்பளவில் யோகா பயிற்சி மையத்துடன் கூடிய புதிய பூங்கா அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன். எனவே, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து நலத் திட்டங்களை தொடர ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின் போது, பகுதி செயலாளர் நடராஜன் மற்றும் நிர்வாகிகள் வெண்தாமரை, பாலு, தளபதி செந்தில், பப்பாயா ராஜேஷ் அசோக் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...