கோவை அரசு மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 1.8 கிலோ கர்ப்பப்பை கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை - டீன் நிர்மலா பாராட்டு!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில், பெண் வயிற்றில் இருந்த, 1.8 கிலோ கர்ப்பப்பைக் கட்டி, வெற்றிகரமாக அகற்றப்பட்டது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில், பெண் வயிற்றில் இருந்த, 1.8 கிலோ கர்ப்பப்பைக் கட்டி, வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

கோவைப்புதுாரை சேர்ந்த, 27 வயது திருமணமான பெண் ஒருவர், வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்துடன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பெண்கள் நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், கர்ப்பப்பையில் பெரிய கட்டி இருப்பதை கண்டறிந்தனர். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணம் என்பது தெரியவந்தது. கட்டியை அகற்ற, மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி, பெண் மற்றும் கணவரிடம், அறுவை சிகிச்சை செய்யும் போது, அதிக ரத்த இழப்பு ஏற்படலாம்; உயிர் காக்கும் பொருட்டு தேவை ஏற்பட்டால், கர்ப்பப்பையையும் அகற்ற நேரலாம் என்பதை எடுத்துக் கூறி, இருவரின் சம்மதத்துடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மகளிர் மற்றும் மகப்பேறு துறை தலைவர் மனோன்மணி, மயக்கவியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையிலான மருத்துவ குழுவினர், பெண்ணின் வயிற்றில் இருந்த, 1.8 கிலோ எடை கொண்ட கட்டியை, கர்ப்பப்பைக்கு ஆபத்தில்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.

இதுகுறித்து, மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், ''இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சுமார், 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டியை அகற்றியதன் மூலம், குழந்தை உண்டாவதற்கான வாய்ப்புடன் கர்ப்பப்பை சீரமைக்கப்பட்டுள்ளது,'' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...