கோவை: ஸ்டீல் விலை ஏற்ற குளறுபடிகளை களைய சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருப்பதாக கோவை மாநகராட்சி ஒப்பந்த தாரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோவை: ஸ்டீல் விலை ஏற்ற குளறுபடிகளைக் களைய சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருப்பதாக கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் உதயகுமார், செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“தமிழகத்தில் ஸ்டீல் விலை உயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு டன் ரூ. 42,000 ஆக இருந்த ஸ்டீல் விலை தற்போது டன் ரூ72,000 அதிகமாக விற்கப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் 55 சதவீதம் அளவிற்கு ஸ்டீல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மூலப் பொருட்களின் விலை எதுவும் உயராத நிலையில் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய ஸ்டீல் நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டு விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கின்றன.
மக்களின் பணத்தை முறைகேடான அபரிமித லாபமாக (illegal profit) ஸ்டீல் நிறுவனங்கள் பெற்று வருவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்டீல் விலையேற்றத்தைக் கண்டித்து பில்டர்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம், கோயம்புத்தூர் பில்டர்ஸ் மற்றும் காண்டிராக்டர்கள்சங்கம் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
பிரதமர் அலுவலகம், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா உள்ளிட்டவற்றுக்கு புகார்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இதுவரை விலை குறைப்பு செய்யப்பட வில்லை.
தமிழகத்தில் அரசு ஒப்பந்ததாரர்கள் சார்பில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் மூலமாக பல லட்சம் கோடி ரூபாய்க்கு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஸ்டீல் விலை உயர்வானது அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளை வெகுவாகப் பாதித்துள்ளது. ஸ்டீல் விலையேற்றம் காரணமாக அரசின் திட்ட மதிப்பீட்டு பணிகளில் 20 முதல் 30 சதவீதம் வரை செலவீனம் அதிகரித்துள்ளது.
எனவே, கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் ஸ்டீல் விலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக உரிய சட்ட விதிகளின்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி சிபிஐ வழக்கு பதிவு செய்து ஸ்டீல் விலையேற்றத்தில் நிலவி வரும் அபரிமித லாப நோக்கம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்கின்றனர். சிபிஐ விசாரணை நடத்தப்பட்டால் ஸ்டீல் விலை ஏற்றத்தில் உள்ள விதிமுறை மீறல்கள் களையப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.” இவ்வாறு கோவை மாநகராட்சி ஒப்பந்த தாரர்கள் கூறி உள்ளனர்.